andhra-style-kadalai-paruppu-usili-recipe ஆந்திரா ஸ்டைல் கடலைப் பருப்பு உசிலி ரெசிபி - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Monday 30 August 2021

andhra-style-kadalai-paruppu-usili-recipe ஆந்திரா ஸ்டைல் கடலைப் பருப்பு உசிலி ரெசிபி

Andhra Style Kadalai Paruppu Usili Recipe In Tamil

ஆந்திரா ஸ்டைல் கடலைப் பருப்பு உசிலி ரெசிபி


தேவையான பொருட்கள்:

* கடலை பருப்பு - 1 கப்

* பச்சை மிளகாய் - 1

தாளிப்பதற்கு...

* கடுகு - 1 டீபூன்

* உளுத்தம் பருப்பு - 1 டீபூன்

* சீரகம் - 1 டீபூன்

* கறிவேப்பிலை - சிறிது

* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

* வெங்காயம் - 1 (நறுக்கியது)

* இஞ்சி பூண்டு விழுது - 1 டீபூன்

* மிளகாய் தூள் - 1 டேபிள் பூன்

* மஞ்சள் தூள் - 1/2 டீபூன்

* உப்பு - சுவைக்கேற்ப

* எண்ணெய் - 1 டேபிள் பூன்

செய்முறை:

* முதலில் கடலைப் பருப்பை சுடுநீரில் போட்டு 30 நிமிடம் ஊற வைக்கவும்.

* பின் கடலைப் பருப்பைக் கழுவி, அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் பச்சை மிளகாய் மற்றும் சிறிது நீர் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.


* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

* பிறகு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து,Vவெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வாக்கவும்.

* பின் அரைத்த கடலைப் பருப்பை சேர்த்து கிளறவும். அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்கினால், ஆந்திரா ஸ்டைல் கடலைப் பருப்பு உசிலி ரெசிபி தயார்.

No comments:

Post a Comment