Neem baguette (நெய்முந்திரி பக்கோடா )
தேவை: கடலை மாவு - 250 கிராம், பச்சரிசி மாவு - 100 கிராம். உடைத்த முந்திரி - 150 கிராம், ஒன்றிரண்டாகப் பொடித்த மிளகு - 1 டீஸ்பூன், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் பேஸ்ட், கரம் மசாலா பவுடர் தலா 1 டீஸ்பூன், சோம்பு பவுடர் - 1/2 டீஸ்பூன், நெய் - 100 கிராம். பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சிறிதளவு, சமையல் சோடா - 1 சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: நெய், சமையல் சோடா சேர்த்து, நுனிவிரல்களால் சிறிது நேரம் கலக்கவும். பின் எல்லா பொருட்களையும்
அதனுடன் சேர்த்து கலந்து மிகக் குறைவான அளவில் தண்ணீர் தெளித்துக் கலந்து
பக்கோடா வடிவில் எண்ணெயில் பொரித்தெடுக்கவும். கேழ்வரகு தேங்காய்ப்பால் அல்வாவும், நெய்முந்திரி பக்கோடாவும் விருந்தாளிகளுக்குக் கொடுக்க செம காம்போ.
No comments:
Post a Comment