Lentil soup ( பருப்பு சூப்)
வயது - குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்
தேவையானவை :
• துவரம்பருப்பு அல்லது பாசிப்பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
உரித்த பூண்டு ஒரு பல் மஞ்சள் தூள் - தேவையெனில் .
.
தண்ணீர் - 8 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
1. பருப்பை எடுத்து 15 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து அதன்பிறகு அதனை நன்றாக கழுவிக் கொள்ளவும்.
2. அதன்பிறகு இத்துடன் பூண்டு மற்றும் மஞ்சள் சேர்த்து பாத்திரத்தில் வேசு வைக்கவும். (மஞ்சள் தேவையெனில் சேர்க்கலாம்) 3. இதனை நீங்கள் பிரஷர் குக்கரிலும் செய்யலாம்.
4. பருப்பு நன்றாக வெந்த பிறகு அதனை மத்து அல்லது கரண்டி கொண்டு மசித்துக் கொள்ளவும்.. 5. வேகவைத்த பருப்பு:ரெடி
தெரிந்து கொள்ள வேண்டியது: முதலில் பாசிப்பருப்பை நீங்கள் குழந்தைக்கு கொடுக்கவும். அதன்பிறகு துவரம்பருப்பு, மைசூர்
பருப்பு என ஒவ்வொன்றாக தரலாம்.
சில குழந்தைகளுக்கு துவரம்பருப்பு வாயுத் தொல்லையை ஏற்படுத்தும் என்பதால் பூண்டு அல்லது பெருங்காயத்தை சேர்த்துக் கொள்வது நல்லது.
பூண்டை சிறிய துண்டுகளாக வெட்டியோ அல்லது நசுக்கியோ சேர்க்கலாம். இதனால் அதில் உள்ள சத்துகள் நேரடியாக கிடைக்கும். அடுப்பிலிருந்து இறக்குவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்பு
இதனை சேர்த்தால் உடனடி பலன் கிடைக்கும்.
பருப்பில் அதிகமான புரதச்சத்து இருக்கிறது. அதேபோல் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும், அலர்ஜியை தவிர்க்கும் தன்மையும் பூண்டில் இருக்கிறது.
No comments:
Post a Comment