kerala-pazhampori-recipe- கேரளா ஸ்பெஷல் பழம்பொரி - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Wednesday, 15 September 2021

kerala-pazhampori-recipe- கேரளா ஸ்பெஷல் பழம்பொரி

Kerala Pazhampori Recipe In Tamil

கேரளா ஸ்பெஷல் பழம்பொரி

தேவையான பொருட்கள்:

* நேந்திரம் பழம் - 2 (நன்கு கனிந்தது)

* மைதா - 1 கப்

* அரிசி மாவு - 1/4 கப்

* பேக்கிங் சோடா - 1 சிட்டிகை

* உப்பு - 1 சிட்டிகை

* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

* ஏலக்காய் - 2 (பொடி செய்து கொள்ளவும்)

* சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்

* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, அரிசி மாவு, பேக்கிங் சோடா, உப்பு, மஞ்சள் தூள், ஏலக்காய் பொடி, சர்க்கரை போட்டு, சிறிது நீர் சேர்த்து, சற்று கெட்டியாக பஜ்ஜி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

* பின் நேந்திரம் பழத்தை நீள நீளமாக சீவிக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.


* எண்ணெய் சூடானதும், வாழைப்பழ துண்டுகளை மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான பழம்பொரி தயார்!

No comments:

Post a Comment