hyderabadi-style-masoor-dal-recipe ஹைதராபாத் ஸ்டைல் மசூர் தால் - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Friday 27 August 2021

hyderabadi-style-masoor-dal-recipe ஹைதராபாத் ஸ்டைல் மசூர் தால்

Hyderabadi Style Masoor Dal Recipe In Tamil

ஹைதராபாத் ஸ்டைல் மசூர் தால்

மைசூர் பருப்பு என்னும் மசூர் பருப்பு அதிக நார்ச்சத்து கொண்டது. இந்த மசூர் பருப்பை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால், அது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சிறப்பாக வைத்துக் கொள்ளும். பொதுவாக துவரம் பருப்பைக் கொண்டு தான் தால் செய்வோம். ஆனால் ஹைதராபாத்தில் மசூர் பருப்பைக் கொண்டு தால் செய்வார்கள். அங்கு இது மிகவும் பிரபலமானது.
உங்கள் வீட்டில் அந்த ஹைதராபாத் ஸ்டைல் மசூர் தால் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் கீழே ஹைதராபாத் ஸ்டைல் மசூர் தால் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த மசூர் தால் சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக இந்த ரெசிபியானது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* மசூர் பருப்பு - 1 கப்

* நெய் - 1 டேபிள் ஸ்பூன்

* பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)

* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

* உப்பு - சுவைக்கேற்ப

* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் மசூர் பருப்பை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.


* பின் அதில் தக்காளியை சேர்த்து, உப்பு, மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* பிறகு அதில் கழுவிய மசூர் பருப்பை சேர்த்து, 1 1/2 கப் நீரை ஊற்றி, குக்கரை மூடி, 2 விசில் விட வேண்டும். விசில் வந்ததும் தீயைக் குறைத்து 3-4 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.

* விசில் போனதும் குக்கரைத் திறந்து, உப்பு சுவை பார்த்து வேண்டுமானால் உப்பையும் சேர்த்து கலந்து, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான ஹைதராபாத் ஸ்டைல் மசூர் தால் தயார்.

No comments:

Post a Comment