பூண்டு ஓம பொடி
தேவையான பொருட்கள்:
* பூண்டு - 6 பல்
* ஓமம் - 2 டீஸ்பூன்
* கடலை மாவு - 2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் + பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் பூண்டு மற்றும் ஓமத்தைப் போட்டு சிறிது நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அரைத்த விழுதை வடிகட்டி சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பௌலில் கடலை மாவு, உப்பு, மிளகாய் தூள் மற்றும் பெருங்காயத் தூள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் சிறிது எண்ணெய் ஊற்றி நன்கு கிளறி, வடிகட்டி வைத்துள்ள சாற்றினை ஊற்றி, தேவைப்பட்டால் சிறிது நீர் சேர்த்து ஓரளவு கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், பிசைந்து வைத்துள்ள மாவை இடியாப்பம் பிழியும் குழலில் போட்டு எண்ணெயில் நேரடியாக பிழிந்து, நன்கு வறுத்து எடுக்க வேண்டும்.
* இதேப் போல் அனைத்து மாவையும் பிழிந்து எடுத்து குளிர வைத்து, பின் கையால் நொறுக்கி விட்டால், பூண்டு ஓம பொடி தயார்.
No comments:
Post a Comment